இந்திய அணியின் சகலதுறை ஆட்டகாரரான கேதர் ஜாதவ் (39 வயது)அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.
வித்தியாசமான முறையில் சுழற்பந்து வீசி ரசிகர்களை கவர்ந்த இவர், ஒருநாள் இந்திய அணியில் 2014-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக அறிமுகமானார்.
இந்திய அணிக்காக 73 போட்டிகளில் விளையாடிய ஜாதவ் 2 சதம் மற்றும் 6 அரை சதம் உள்டங்கலாக 1389 ஓட்டங்களை குவித்துள்ளார்.
கேதர் ஜாதவ் ஓய்வு
இந்திய ரி20 அணியில் 2015-ம் ஆண்டு அறிமுகமான அவர் 2017-ம் ஆண்டு அவுஸ்ரேலியாவுக்கு எதிராக தனது கடைசி போட்டியில் விளையாடினார்.
பின்னர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்த நிலையில், தற்போது அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வவை அறிவித்துள்ளார்.
அண்மையில் இந்திய கிரிக்கெட் வீரர் தினேஸ் கார்த்திக் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/kedar-jadhav-announces-retirement-from-all-cricket-1717412897
