1999ஆம் ஆண்டு மடுக்கோவிலில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறும் “ 1999ஆம் ஆண்டு மடு உறவுகள் கால்பந்தாட்ட போட்டி இன்று தட்சனாமருதமடு ஐக்கிய விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று இடம்பெற்றது.
இளம் தலைமுறையினரிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், கடந்த கால வடுக்களை நினைவுகூறும் வகையிலும், இந்த கால்பந்தாட்டத் தொடர் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போட்டியில் பல்வேறு அணிகள் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
நினைவேந்தல் கால்பந்தாட்ட நிகழ்வு
இந்த போட்டியின் பிரதான விருந்தினர்களாக ஐ.பி.சி தமிழ் ஊடக நிறுவனத்தின் தலைவர் பாஸ்கரன் கந்தையா கலந்துக்கொண்ட நிலையில் கௌரவ விருந்தினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தியிருந்தனர்.
இந்த கால்பந்தாட்டப் போட்டி இன்று (30.08.2026) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகியது.
இதன்படி போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு கேடையங்களும் சிறப்பு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
Source: https://ibctamil.com/article/commemorative-football-event-1788091574
