Home இலங்கை சமூகம் வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேச்சரத்தின் கொடியேற்றம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நகுலேச்சரத்தின் கொடியேற்றம்

0

பஞ்ச ஈச்சரங்களில் ஈழத்தில் வடபால் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கீரிமலை
நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமான் ஆலய வருடாந்த மகோற்சவம்
கொடியேற்றத்துடன் இன்று (13) ஆரம்பமானது.

காலை 7.00 மணியளில் ஆரம்பமான அபிஷேகத்தையடுத்து
காலை 9.00 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்று
காலை.10 .00 மணிக்கு வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

சிறப்பு பூசை 

பதினைந்து தினங்களைக் கொண்ட மகோற்சவத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி இரவு பெரிய
சப்பறத் திருவிழாவும், 26ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், அன்றிரவு
சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளும் இடம்பெற்று மறுநாள் 27ஆம் திகதி
தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version