Home சினிமா பாலிவுட் போனால் மட்டும் ஓவர் கிளாமர்.. கீர்த்தி சுரேஷை விடாமல் விமர்சிக்கும் நெட்டிசன்கள்

பாலிவுட் போனால் மட்டும் ஓவர் கிளாமர்.. கீர்த்தி சுரேஷை விடாமல் விமர்சிக்கும் நெட்டிசன்கள்

0

நடிகை கீர்த்தி சுரேஷ் அட்லீ தயாரிப்பில் உருவாகும் பேபி ஜான் என்ற படத்தில் ஹீரோயினாக நடத்து வருகிறார். அவருக்கு பாலிவுட்டில் இது பெரிய எண்ட்ரியாக அமையும் என எதிர்பார்த்து வருகிறார்.

வருண் தவான் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தின் கீர்த்தி தாராள கிளாமரில் நடித்து இருக்கிறார். பாடல்களிலும் கவர்ச்சியாக நடனம் ஆடி இருக்கிறார்.

விருது விழாவில் கிளாமர்

கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் செம கவர்ச்சியாக கலந்து கொண்டு இருக்கிறார். அதன் புகைப்படங்களை தற்போது கீர்த்தி வெளியிட்டு இருக்கிறார்.

இங்கு விருது விழா என்றால் சேலையில் ஹோம்லியாக வரும் கீர்த்தி பாலிவுட் போனால் மட்டும் ஓவர் கிளாமர் காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

Source: https://cineulagam.com/article/keerthy-suresh-glamour-only-for-bollywood-1723381277

NO COMMENTS

Exit mobile version