விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்
குறித்த உத்தரவானது இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
