Home உலகம் உயிருடன் வந்த கமேனியின் சகா: இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு

உயிருடன் வந்த கமேனியின் சகா: இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுத்த அறிவிப்பு

0

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் முக்கிய ஆலோசகராக உள்ள அலி ஷம்கானி இன்னமும் உயிருடன் இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் தற்போது தீவிர காயங்களிலிருந்து மீண்டு வருவதாக ஈரான் அரசாங்கம் சார்ந்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் (ஜூன் 13) இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் அலி ஷம்கானி கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் உட்பட பல சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன.

உயிரையும் தியாகம் செய்யத் தயார்

இந்த நிலையில், தற்போது அதே ஊடகங்கள், அவர் உயிருடன் இருப்பதாகவும், “நான் உயிருடன் உள்ளேன்; என் உயிரையும் தியாகம் செய்யத் தயார்,” என்று அவர் கூறியதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்த அறிக்கையின் படி, அலி ஷம்கானி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது நிலைமை சீராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version