Home இலங்கை சமூகம் திருமணம் நடந்து நான்கு நாட்களில் ஏற்பட்ட விபரீதம் : கடத்தப்பட்ட மணப்பெண்

திருமணம் நடந்து நான்கு நாட்களில் ஏற்பட்ட விபரீதம் : கடத்தப்பட்ட மணப்பெண்

0

அனுராதபுரம் (Anuradhapuram) தம்புத்தேகம (Tambuttegama) பிரதேசத்தில் திருமணம் நடந்து நான்கு நாட்களின் பின் இளம் பெண்ணொருவர் கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், 20 வயதான குறித்த பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட பெண்ணின் தந்தை ஒரு காவல்துறை அதிகாரி எனவும் நேற்று முன்தினம் (16) காலை மணப்பெண் முற்றத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த போது கும்பல் ஒன்றினால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மணப்பெண் அலறல்

அத்தோடு, மணப்பெண் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போதிலும் தடுத்து நிறுத்த முடியாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில், சம்பவம் குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடமேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வசந்த கித்சிறி (Vasantha Kitsiri) தெரிவித்துள்ளார்.

கடத்தல்காரர்கள்

கடத்தல்காரர்கள் மூவரையும் கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் மணமகள் கடத்தப்பட்ட போது மணமகன் வீட்டில் இல்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கடத்தப்பட்ட மணப்பெண் குறித்து நேற்று (17)  மாலை வரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version