Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் மிளகாய் தோட்டத்தை அழித்த சட்டவிரோத கும்பல்

கிளிநொச்சியில் மிளகாய் தோட்டத்தை அழித்த சட்டவிரோத கும்பல்

0

கிளிநொச்சியில் (Kilinochchi) இயங்கி வரும் சட்டவிரோத குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள்,  பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வாழ்வாதார மிளகாய் தோட்டத்தை சேதப்படுத்தியுள்ளனர்.

கண்டாவளை பகுதியில், நிறுவனம் ஒன்றினால் இருவருக்கு வழங்கப்பட்ட தோட்டமே நேற்றிரவு (25.04.2024) இவ்வாறு அழிவுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. 

குறித்த மிளகாய் பயிர்ச் செய்கையானது, பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் மற்றுமொரு  குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றின் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து அமைத்துக்  கொடுக்கப்பட்டுள்ளது.

தரக்குறைவான அரிசி தொடர்பில் உடனடி விசாரணை: நாடாளுமன்றில் கோரிக்கை

உதவி திட்டம் 

இந்நிலையில், நேற்றிரவு10 மணிக்கு பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளை பிடுங்கி எறிந்துள்ளனர்.

அத்துடன், தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்தும், வெட்டியும்
சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும், சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு கிராமங்களைச்
சேர்ந்து சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்ளில்
இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு மற்றும் வாள்வெட்டு உள்ளிட்ட
பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பிற்கு வரப்போகும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்: சபையில் அம்பலமான தகவல்

தொடரும் குற்றச்சாட்டுக்கள் 

இந்நிலையில், இவர்கள் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாக முறைப்பாடு செய்வதற்கு கூட ஒருவரும் முன்வருவதில்லை என தெரிய வந்துள்ளது. 

அதேவேளை, அண்மையில் மிளகாய் தோட்ட
உரிமையாளர்களில் ஒருவரின் மாடு திருடப்பட்ட விடயத்தில் அவர் பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது
செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றால் விளக்கமறியல்
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய்
தோட்டத்தை அழித்துள்ளனர் என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலிஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும்
மேற்கொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சவூதி அரேபியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version