Home இலங்கை சமூகம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பம்

0

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட பதில் அரசாங்க அதிபர்
முரளிதரன், மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் பெற்று முதலாவது
ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த கூட்டம் இன்று (04.07.2024) காலை
9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது.

மேலும், கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இந்தக் கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

பொலிஸ் உயர் அதிகாரிகள்

அத்துடன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் முரளிதரன்,
வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், வடமாகாண அமைச்சு சார்ந்த திணைக்களங்களின்
பணிப்பாளர்கள், இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.

Source: https://tamilwin.com/article/kilinochchi-district-committee-meeting-begins-1720086672

NO COMMENTS

Exit mobile version