Home முக்கியச் செய்திகள் மழை வெள்ளத்தால் பெரிதும் பாதித்துள்ள கிளிநொச்சி மாவட்டம்

மழை வெள்ளத்தால் பெரிதும் பாதித்துள்ள கிளிநொச்சி மாவட்டம்

0

கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் வட்டக்கச்சிக்கு செல்லும் பிரதான வீதியூடான போக்குவரத்திற்கு முழுமையான தடைப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

பாதை முழுமையான சேதமடைந்தமையால் இத்தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனர்த்த முகாமைத்துவ பிரிவும் இராணுவத்தினரும் இணைந்து பாதைக்கான தடையினை அமைத்துள்ளனர்.

அத்தோடு, மறு அறிவித்தல் வரை இப்பாதைக்கான தடை நடைமுறையிலிருக்கும் பொதுமக்கள் இவ் அறிவித்தலை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிவாரணப்பணி

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இடைத்தங்கல் முகாம்களுக்கான அத்தியாவசிய பொருட்களை உடனடியாக விநியோகிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 4781குடும்பங்களைச்சேர்ந்த 15049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் 26 இடைத்தங்கல் முகாம்கள் செயற்பட்டுவருகின்றன.
இவற்றிலே தங்கியுள்ள பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் மாவட்ட தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் ஊடாக விநியோகிக்கும் நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன.

பன்னங்கண்டிப் பகுதி

கிளிநொச்சி – பன்னங்கண்டிப்பகுதியில் டிப்பர் வாகனத்தோடு வெள்ளத்தில் சிக்கிய
இருவரும் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் வட்டக்கச்சிக்கு செல்லும் பிரதான வீதியில் டிப்பர் வாகனத்தில் சென்று வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட இரண்டு நபர்களை மீட்கும் 7 மணித்தியாளங்களுக்கு மேலான இரவுநேர மீட்பு பணி வெற்றியளிக்காத நிலமையில் காலையில் மீளவும் மீட்கும் பணியில் அனர்த்த முகாமைத்துவ பிரிவும் இராணுவத்தினரும்
கடமையாற்றி வந்த நிலையில் மீட்பு நடவடிக்கை வெற்றியளித்தது.

நேற்றிரவு முழுவதும் மழையின் தாக்கத்திற்கு முகம்கொடுத்து தவித்து வந்த இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தேவையான அவசர முதலுதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

NO COMMENTS

Exit mobile version