Home இலங்கை அரசியல் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை விவகாரம்! இளங்குமரன் எம்பி பொலிஸில் முறைபாடு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை விவகாரம்! இளங்குமரன் எம்பி பொலிஸில் முறைபாடு

0

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளி நலன்புரிச்சங்கம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை அழைத்து போராட்டம் மேற்கொண்டமை அரசுக்கெதிரான நடவடிக்கை விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாடு நேற்றையதினம்(30) பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் நெதர்லாந்து அரசின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள பெண்நோய்யியல் பிரிவு வைத்திய உபகரணங்களை வேறு மாகாணங்களுக்கு கொண்டு செல்ல முற்படுவதாக நோயாளி நலன்புரிச்சங்கம் துண்டுப்பிரசுரம் மூலம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த விடயம் பொய்யான விடயம் அரசுக்கெதிரானது என தெரிவித்தே குறித்த முறைப்பாட்டை பதிவு செய்தார்.

NO COMMENTS

Exit mobile version