கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்பு
பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிராந்திய பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிலுள்ள ஊடகவியலாளர்
சுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்கள் மீது நேற்றுக்காலை தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பொருட்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் மீது தலைக்கவசத்தால் தாக்ககுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலியான முறைப்பாடு
சம்பவம் தொடர்பாகவும்
பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாகவும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது சம்பவ
இடத்தை பொலிஸார் நேரில் சென்று பார்வையிட்டதுடன் இது தொடர்பு
பட்ட இரண்டு சந்தேக நபர்களை நேற்று கைது செய்திருந்தனர்.
முன்னதாக குறித்த தாக்குதல் சம்பவத்தை பொலிஸார் திசை திருப்பும் நோக்கில் போலியான முறைப்பட்டை
பதிவு செய்ததாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த தாக்குதல் மேற்கொண்ட
இரண்டு பேரில் ஒருவரை குறித்த சம்பவத்திலிருந்து விடுவித்து மற்றைய ஒருவரையே
இன்று மாலை நீதி மன்றில் முன்னிலைப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின்
கடமையிலுள்ள பதில் பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து, இது தொடர்பாக நடந்த விடயத்துக்கு மன்னிப்பு
கோரியதுடன், விடயம் தொடர்பாக மீள முறைப்பாடு பதிவு செய்யுமாறு
கோரிக்கையும் விடுத்துள்ளதாக குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்