Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுபோக அறுவடை.. விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை

கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுபோக அறுவடை.. விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை

0

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தின் பிரமந்தனாறு நீர்ப்பாசன குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை 175
ஏக்கர் நெச்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அறுவடை நடைபெற்று வருகின்றது. 

2025ஆம் ஆண்டுக்கான சிறுபோக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இம்முறையும் போதிய அளவிலான விளைச்சலை பெற முடியாத நிலையில் உள்ளதாகவும் பல
தடவைகள் கிருமி நாசினி விசிறப்பட்டு உள்ளது. 

நிர்ணய விலை

இருப்பினும், உரிய விளைச்சலை பெற முடியாத
நிலை தோன்றியுள்ளதாகவும் நெற்செய்கை்கான அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும்
அரசாங்கத்தினால் உரிய காலத்தில் நெல்லுக்கான நிர்ணய விலை விவசாயிகளுக்கு ஏற்ற
வகையில் உரிய காலத்தில் நிர்ணயிக்கப்படுவதில்லை என விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் இந்த தாமதம் காரணமாக விவசாயிகள்
அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய முடியாத நிலையில் இடைத்தரகர்களுக்கு
விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. 

அத்துடன், தற்போதைய அரசாங்கமாவது
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரிய நேரத்தில் நெல்லுக்கான விலையை
நிர்ணயிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தொடர்ச்சியாக விவசாய செய்கையை
மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version