இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால்
சேதமடைந்த பாலங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை
ஆரம்பித்துள்ளனர்.
அந்த வகையில் பரந்தன் முல்லைத்தீவு A-35 வீதியின் பதினொராவது கிலோமீற்றரில்
அமைந்திருந்த பாலத்தினை புனரமைப்பதற்கான
நடவடிக்கைகளை இன்று(8) ஆரம்பித்துள்ளள்ளனர்.
கிளிநொச்சிக்கு வருகை தந்த இந்திய இராணுவ பொறியியலாளர் மேஜர் தலைமையிலான குழுவினர் புனரமைப்பு பணிக்கான ஆரம்ப
கட்ட வேலைகளை ஆரம்பித்துள்ளனர்.
