Home இலங்கை சமூகம் கிளிநொச்சி – புழுதியாறு குள நீர்ப்பாசனத்திட்டம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிளிநொச்சி – புழுதியாறு குள நீர்ப்பாசனத்திட்டம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0

கிளிநொச்சி – புழுதியாறு குளத்தில் சுமார் மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபா
செலவில் நிர்மானிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு மேலாக செயலிழந்துள்ள ஏற்று
நீர்ப்பாசனத்திட்டம் மேற்கொள்ளப்பட வேண்டுமென குறித்த பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர் கிராமத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தும் வகையிலும் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வடக்கு மாகாண
சபையால் கடந்த 2017ஆம் ஆண்டு சுமார் மூன்று கோடியே இருபது இலட்சம் ரூபா
செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஏற்று நீர் பாசன திட்டம் உரிய முறையில்
முன்னெடுக்கப்படாத நிலையில் மக்களுக்கு பயனற்ற ஒரு திட்டமாகவே கடந்த எட்டு
ஆண்டுகளுக்கு மேலாக காணப்படுகின்றது.

அரசியல் தலையீடுகள் 

இந்த நிலையில் குறித்த ஏற்று நீர்ப்பாசன திட்டத்தின் குறைபாடுகள் தொடர்பிலும்
அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு உரிய தரப்புக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்ற கோரிக்கையை அந்த பிரதேச பொதுமக்கள் மற்றும் விவசாயிகள்
முன்வைத்துள்ளனர்.
முன்னெடுக்குமாறு கூறியுள்ளனர்.

முன்னதாக கடந்த காலங்களில் அந்த குளத்தின்
அபிவிருத்தி வேலைகள் அரசியல் தலையீடுகளால் அபிவிருத்தி பணிகளில் ஊழல்கள்
இடம்பெற்றுள்ளன.

ஆகவே, எதிர்காலத்தில் எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி அதன் மீளமைப்பு
பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளதுடன் அரசியல் தற்போது சிலர்
வருகை தந்து குளத்தை அபிவிருத்தி செய்து தருவதாகவும் ஏற்று நீர்ப்பாசன
திட்டத்தை ஏற்படுத்தி தருவதாகவும் போலியான வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறு தங்களை கடந்த காலங்களில் சிலர் தமது அரசியல் இலாபத்திற்காக
ஏமாற்றியது போன்று இம்முறையும் ஏமாற்றுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை
என்றும் பின்தங்கிய தங்களுடைய கிராமத்தை பின்தங்கிய நிலையிலே வைத்திருப்பதற்கு
சிலர் முயற்சி செய்து வருவதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version