Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் மூன்று மில்லியன் செலவில் கட்டமைக்கப்ட்ட தபாலக கட்டிடம்

கிளிநொச்சியில் மூன்று மில்லியன் செலவில் கட்டமைக்கப்ட்ட தபாலக கட்டிடம்

0

கிளிநொச்சி – முரசுமோட்டை பிரதேசத்தில் சுமார் மூன்று மில்லியன் செலவில்
அமைக்கப்பட்ட உப தபாலக கட்டிடம் இன்று (03.07.2025) கடற்றொழில் அமைச்சரால்
திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் நிரந்தர கட்டிடமின்றி இயங்கி வந்த உப
தபாலகத்துக்கான நிரந்தர கட்டிடம் மூன்று மில்லியன் ரூபாய் செலவில்
நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 

போசாக்கு பொதிகள்

இந்நிலையில் உப தபாலகத்துக்கான கட்டிடத்தினை இன்று
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் திறந்து வைத்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீபன், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், கண்டாவளை பிரதேச செயலாளர் மற்றும் துறைசார்ந்த திணைக்களத்தின் பதவி
நிலை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான போசாக்கு பொதிகள் மற்றும்
மாற்றுத்திறனாளிகளுக்கான ஊன்று கோல் சக்கர நாற்காலி என்பன வழங்கி
வைக்கப்பட்டன. 

NO COMMENTS

Exit mobile version