கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது இன்று(1) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கெதிராக சமூகவலைத்தளங்களுடாக பரப்படும் அவதூறு பரப்புரைகளை தடுக்ககோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம தொடர்பில் ஏற்கனவே
முழங்காவில் பொலிஸ் நிலையம் மற்றும் மாகாண கல்வி திணைக்களம் ஆகியவற்றில்
முறைப்பாடுகளை தெரிவித்தும் இதுவரை எந்தவித தீர்வுகளும் வழங்கப்படாத நிலையில்
இன்றைய தினம் மாணவர்களின் பெற்றோர்கள் காலை பாடசாலையின் நுழைவாயிலை மூடி
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதுடன் இதற்கான தீர்வு வரும் வரை
தாங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்
இதனால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் ஸ்தம்பித்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
