Home முக்கியச் செய்திகள் கிளிநொச்சியில் முளைத்த திடீர் பணக்காரர்கள்: அம்பலப்படுத்திய எம்.பி

கிளிநொச்சியில் முளைத்த திடீர் பணக்காரர்கள்: அம்பலப்படுத்திய எம்.பி

0

கிளிநொச்சியில் திடீர் பணக்காரராகியவர்களின் பட்டியல் விரைவில் விசாரணைக்கு
உட்படுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “என்னை நீதிமன்றத்திற்கு அளக்களிப்பதன் மூலம் எனது மக்கள் பணியை தடுத்து விட
முடியாது.

முனிஸ்வரர் ஆலயத்துக்கு முன் பக்க வாயிலில் தொல் பொருள் திணைக்கள நடுகல்லை
பின் நோக்கி நகர்த்தியிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.

இராணுவத்தின் பிடியில் உள்ள சிங்கள மகாவித்தியாலய காணியில் பல் பொருள் அங்காடி
அமைப்பதற்கான கோரிக்கையை துறைசார் அமைச்சரிடம் சமர்ப்பிக்கவுள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.   

https://www.youtube.com/embed/C2FYR_O5j-8

NO COMMENTS

Exit mobile version