Home சினிமா மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் கே ஜே யேசுதாஸ்.. அதிர்ச்சி தகவல்

மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் கே ஜே யேசுதாஸ்.. அதிர்ச்சி தகவல்

0

கே ஜே யேசுதாஸ்

இந்திய சினிமாவில் தனது பாடல்கள் மூலம் பல கோடி ரசிகர்களை சம்பாதித்தவர் கே ஜே யேசுதாஸ். இவர் தமிழில் மட்டுமே சுமார் 700க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

எம்ஜிஆர் முதல் விஜய் வரை பல தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். இவரை தொடர்ந்து இவருடைய மகன் விஜய் யேசுதாசும் பின்னணி பாடகராக சினிமாவில் கலக்கிக்கொண்டு இருக்கிறார். மேலும் சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

எனக்கும் என் தங்கைக்கும் 16 வருடங்கள் இடைவெளி.. மனம் திறந்து பேசிய ராஷ்மிகா மந்தனா

மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில், பாடகர் யேசுதாஸ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

85 வயதாகும் கே ஜே யேசுதாஸ் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை குறித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவர் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது பிராத்தனைகள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version