இனிப்பு நிறைந்த, வண்ணமயமான, வெப்பமண்டல கொய்யாப்பழம், வெறும் சுவையானது மட்டுமல்ல சருமத்திற்கு அதிசயங்களைச் செய்யக்கூடிய பல ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது என்றால் நம்புவீர்களா..!
தினமும் கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொழுப்பை குறைத்திடும். கொய்யாவில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கின்றன. குறிப்பாக, நெல்லிக்கு அடுத்து அதிக வைட்டமின் ‘சி’ சத்து உள்ள பழம் கொய்யாதான்.
மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள்
தற்போதைய உணவுகளில் அதிகம் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதால் அவை அமிலத்தை உண்டாக்கி வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகின்றன. இதைப் போக்க, உணவுக்குப் பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது. மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் மூல நோய் தீர்ந்துவிடும்.
நீரிழிவு நோயாளிக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் ஏற்றது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.
அறிவுத்திறன் அதிகரிக்கும்
குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்துவந்தால் அவர்களின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும்.
