Home இலங்கை குற்றம் யாழில் பண மோசடியில் அரச அதிகாரி: பொலிஸார் தீவிர விசாரணை

யாழில் பண மோசடியில் அரச அதிகாரி: பொலிஸார் தீவிர விசாரணை

0

யாழ்ப்பாணம் (Jaffna), கொக்குவில் தொடருந்து நிலையத்தில் கடமையாற்றிய நிலைய பொறுப்பதிகாரி மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், குறித்த தொடருந்து நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொக்குவில் தொடருந்து நிலையத்தில் கடமையாற்றிய நிலையப் பொறுப்பதிகாரி இருபது இலட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரிவித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

மேலதிக விசாரணைகள்

இது தொடர்பில் உடனடி நடவடிக்கையாக தொடருந்து நிலையம் சீல் வைக்கப்பட்டு
மூடப்பட்டுள்ளதுடன் நிலையப் பொறுப்பதிகாரி தற்காலிக இடைநிறுத்தம்
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து
வருகின்றனர்.

தொடருந்து நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் பிரயாணப் பயணச்சீட்டுக்களை பெற யாழ்ப்பாணம்
தொடருந்து நிலையத்திற்கு செல்லவும் என்று அறிவிப்பொன்றும் கொக்குவில் தொடருந்து நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாடு செல்ல காத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெண்ணொருவரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட பொலிஸாரின் துப்பாக்கி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version