புதிய இணைப்பு
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று (07.11.2025) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றையதினம் (07.11.2025) 16ஆவது வீதியில் நடந்துள்ளது.
இதன்போது, ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
குறித்த நபரை சொகுசு காரில் வந்த ஒரு குழுவினர் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றக் கும்பல் தலைவர் பழனி ரெமோசனின் குழுவினர் பூகுடு கண்ணாவின் குற்றக் குழுவை சேர்ந்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
