கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29 ஆம் திகதி தவறான முடிவெடுத்து மாணவியொருவர் உயிரிழந்திருந்தார்.
மாணவி கல்வி கற்ற பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புருத்தலுக்கு உள்ளாக்கியமையினால் மாணவி இவ்வாறு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கோரி இன்று (08) கொழும்பு – பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்திற்கு இடையூரு விளைவித்த காவல்துறையினர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் சபையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் இன்று (08) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சுட்டிக்காட்டிய அவர், இந்த சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
https://www.youtube.com/embed/rPuAISzL1G4
