Home இலங்கை சமூகம் இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து – பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்

இலங்கையை சோகமயமாக்கிய கோர விபத்து – பிள்ளையை காப்பாற்றிய தாய் தொடர்பான தகவல்

0

கொத்மலை, கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்த பெண் 5 பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

அன்னையர் தினமான நேற்று பிள்ளையை உயிரை காப்பாற்ற குறித்த தாய் போராடியமை குறித்து அதிகளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் தாய் – தந்தை உயிரிழந்த நிலையில் 3 பிள்ளைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கொத்மலை விபத்து

மீரியபெத்த பகதியில் இருந்து கொஸ்லந்த பிரதேசத்தில் உள்ள பெண்ணின் சகோதரனின் வீட்டிற்கு சென்ற மீண்டும் கண்டி செல்வதற்காக இந்த பேருந்தில் குறித்த குடும்பத்தினர் ஏறியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் 3 பிள்ளைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 பிள்ளைகள் வீட்டில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்திருந்த கணவனும் உயிரிழந்துள்ளார். 16, 10 மற்றும் 9 மாத பிள்ளைகளே இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பல மணி நேர போராட்டம்

பேருந்தில் 9 மாத பெண் குழந்தையை கையில் பிடித்துக் கொண்டு பல மணி நேரம் போராடிய பெண் நேற்று மாலை உயிரிழந்தார்.

நேற்று நடந்த கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

NO COMMENTS

Exit mobile version