Home சினிமா வீடு கட்ட நினைத்து கடைசியில் KPY பாலா செய்த தரமான செயல்… குவியும் வாழ்த்து

வீடு கட்ட நினைத்து கடைசியில் KPY பாலா செய்த தரமான செயல்… குவியும் வாழ்த்து

0

KPY பாலா

விஜய் டிவி, ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பல திறமையுள்ள கலைஞர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம் பிரபலமாகி பின் சின்ன சின்ன ஷோக்களில் தலைக்காட்டி ரைமிங்-டைமிங் காமெடி மூலம் மக்களிடம் தனி கவனத்தை பெற்றவர் தான் பாலா.

இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது என்றால் அது குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி தான். தற்போது பாலா வெள்ளித்திரையில் நாயகனாக கலக்க துவங்கியுள்ளார்.

இலவசம்

தான் சம்பாதிக்கும் பணத்தில் கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவதும், ஆம்புலன்ஸ் வாங்கி தருவதும் என நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்.

அப்படி தான் KPY பாலா இப்போது ஒரு இலவச மருத்துவமனை கட்டிவரும் தகவல் வெளியாகியுள்ளது. 6 வருட உழைப்பில் ஒரு இடம் வாங்கினேன், வீடு கட்ட தான் இடம் முதலில் வாங்கினேன்.

ஆனால் வீடு கட்டி வாழ்ந்தா நான் மட்டும் தான் சந்தோஷமா இருப்பேன், அதே இலவச மருத்துவமனை கட்டினால் ஒரு நாளைக்கு 100 ஏழை மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என கூறியுள்ளார். 

தற்போது பாலா காந்தி கண்ணாடி என்ற படம் மூலம் நாயகனாக நடித்துள்ளார், இப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version