Home சினிமா தமிழில் படுதோல்வி, ஆனால் தெலுங்கில் ஹிட்.. குபேரா படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

தமிழில் படுதோல்வி, ஆனால் தெலுங்கில் ஹிட்.. குபேரா படத்தின் இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

0

குபேரா

தனுஷ் – நாகர்ஜுனா – ராஷ்மிகா மந்தனா மூவரும் இணைந்து நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் குபேரா. இப்படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்க Sree Venkateswara Cinemas LLP மற்றும் Amigos Creations நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த குபேரா திரைப்படம் தமிழில் படுதோல்வியை சந்தித்துள்ளது.

21 நாட்களில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய மாதவன்.. எப்படி தெரியுமா

ஆனால், தெலுங்கில் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது. சமீபத்தில் கூட தெலுங்கில் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் அனைவரும் இணைந்து கொண்டாடினார்கள். சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றினார்.

வசூல் 

இந்த நிலையில், குபேரா வெளிவந்து 9 நாட்களை கடந்திருக்கும் நிலையில் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 9 நாட்களில் ரூ. 128 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version