Home இலங்கை அரசியல் குச்சவெளி பிரதேச பூஜாபூமி காணிப் பிரச்சினை: அருண் ஹேமச்சந்திரா தலைமையில் கலந்துரையாடல்

குச்சவெளி பிரதேச பூஜாபூமி காணிப் பிரச்சினை: அருண் ஹேமச்சந்திரா தலைமையில் கலந்துரையாடல்

0

குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூஜாபூமி காணிப் பிரச்சினை தொடர்பாக
பொதுமக்களுடனான கலந்துரையாடலானது  இடம்பெற்றுள்ளது.

நேற்றையதினம்(26) திருகோணமலை மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் குறித்த கலந்துரையாடலானது இடம்பெற்றுள்ளது.

 காணிப் பிரச்சினை

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும்
வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா
தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, குச்சவெளி
பிரதேச செயலாளர் சியாவுல் ஹக், குச்சவெளி வெளிக்கள போதனாசிரியர் நவசீலன்,
மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ் குருகுலசூரிய உட்பட
குச்சவெளி பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version