Home இலங்கை அரசியல் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்: குகதாசன் எம்.பியின் கோரிக்கை

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்: குகதாசன் எம்.பியின் கோரிக்கை

0

கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று(21.04.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு
குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“திருகோணமலை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் பல
விடயங்களை மேற்கொள்ளவுள்ள நிலையில் இவ்வாறான திட்டமிடப்படாத அபிவிருத்தி
கோனேஸ்வரர் கோவில் பகுதி உட்பட கரையோர பகுதிகளுக்கும் பாதக விளைவுகளை
ஏற்படுத்தும். 

வீடமைப்பு திட்டம் சாத்தியமாகாது

குறித்த இந்த பத்தாண்டு திட்டத்தில் மூன்று விடயங்கள்
பாதகமானது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவருடைய ஆட்சிக்காலத்தில் குறித்த பகுதியில் திட்டம் ஒன்றை முன்வைத்தார்.

அது நகர அபிவிருத்தி அதிகார சபையால் நிராகரிக்கப்பட்டது. ஏனெனில், அந்த பகுதி
தொல்பொருள் பகுதி மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை பகுதி என்பதால்
வீடமைப்பு திட்டம் சாத்தியமாகாது” எனத் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version