Home இலங்கை சமூகம் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல்

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25ஆவது ஆண்டு நினைவேந்தல்

0

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பிரபல சட்டத்தரணியுமான
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் (Kumar Ponnambalam) 25 ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் (Vavuniya) அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தால் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில்
உள்ள கொட்டகையில் இன்றைய தினம் (05) இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

மலர் அஞ்சலி 

சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சங்கத்தின்
தலைவி காசிபிள்ளை ஜெயவனிதா ஈகை சுடரேற்றினார்.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டோரின்
உறவினர்கள் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தி நினைவேந்தினர்.

NO COMMENTS

Exit mobile version