Home இலங்கை சமூகம் சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக பெருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் கள்ளியடி அருள்மிகு கற்பக பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக பெருவிழா

0

மன்னார் (Mannar) கள்ளியடி அருள்மிகு ஸ்ரீ கற்பகப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக பெருவிழா பக்தர்களின் பங்குபற்றுதலுடன் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது நேற்று (22) காலை 8.20 தொடக்கம் 9.35 வரையான சுப முகூர்த்த வேளையில் விநாயகப் பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேக பெருவிழா

இதனை தொடர்ந்து தசமங்கள தரிசனம் மற்றும் எஜமான் அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா அபிஷேகம் நடைபெற்று மகேஸ்வர பூஜையும் அன்னதானமும் இடம்பெற்றது.

மேலும், கும்பாபிஷேக பெருவிழாவை தொடர்ந்து 10 நாட்களுக்கு மண்டல அபிஷேகங்கள் நடைபெற்று பன்னிரெண்டாம் நாள் 108 சங்காபிஷேகம் இடம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/kumbabhishekam-mannar-kalliadi-karpaka-pilliyar-1724407053

NO COMMENTS

Exit mobile version