Home ஏனையவை ஆன்மீகம் மாமாங்கேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று

மாமாங்கேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று

0

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ
மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் இன்று(02) புதன்கிழமை காலை
நடைபெறவுள்ளது.

இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஒருங்கே கொண்ட ஆலயம்
என பல்வேறு சிறப்புகளை கொண்ட மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர்
ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமானது.

கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 26ஆம் திகதி தொடக்கம் அடியார்கள்
எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்று நேற்று செவ்வாய்க்கிழமை காலை
வரையில் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.

அமிர்தசித்தயோகம்

இன்று புதன்கிழமை காலை ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் காலை
06மணிக்கு கிரியைகள் விநாயகர் வழிபாடுகளுடன் ஆரம்பமாகவுள்ளது.

முற்பகல் 11.05 தொடக்கம் 11.55மணி வரையில் உள்ள ஆனி உத்தரமும்
அமிர்தசித்தயோகமும் கூடிய கன்னி லக்ன சுபமுகூர்த்தவேளையில் கும்பாபிஷேகம்
வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version