Home இலங்கை சமூகம் 22 நாட்களாக மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க போராடும் மக்கள்

22 நாட்களாக மண்ணில் புதைந்துள்ள உடல்களை மீட்க போராடும் மக்கள்

0

22 நாட்கள் கடந்தும், டிட்வா புயலின் போது மண்சரிவில் சிக்கிய குடும்பத்தின் உடல்கள் இதுவரை மீட்கப்படவில்லை என மாத்தளை மாவட்டத்தின் அம்பன்கங்கொல்ல – கம்மடுவ பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் 228 கும்பங்கள் வசிக்கும் நிலையில் 361 பேர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதற்கிடையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மண்சரிவில் புதையுண்ட நிலையில் இதுவரை மீட்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கண்டுகொள்ளாத அதிகாரிகள்.. 

இது தொடர்பில் அங்குள்ள குடிமகன் ஒருவர் ஊடகங்களிடம் குறிப்பிடுகையில், ” ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மண்சரிவில் புதையுண்டு மண்ணோடு மண்ணாகி விட்டனர்.

ஆனாலும் இதுவரை அந்த குடும்பத்தை இராணுவமோ பொலிஸாரோ மீட்கவில்லை.

இருந்தும் கூட அரச அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நாங்கள் பல தடவைகள் முயற்சி செய்தோம். 22 நாட்கள் ஆகியும் அவர்கள் யாரும் அவ்விடத்திற்கு போகவில்லை.

இந்நிலையிலேயே தற்போது, அதிகாரிகளிடம் தொடர்ந்து தெரியப்படுத்தியதை அடுத்து, இராணுவ அதிகாரிகள் உட்பட இளைஞர்கள் அங்கு சென்றுள்ளனர்.

அதேநேரம், தஞ்சம் புகுந்துள்ள 300இற்கும் மேற்பட்ட மக்கள், தொற்றுநோய்க்கு ஆளாகுகின்றனர்.

உணவு வழங்கப்பட்டாலும், குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள் உள்ளிட்டோர் அடிப்படை தேவைகளுக்காக கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version