Home இலங்கை அரசியல் கொழும்பு மாநகரசபை மேயர் பதவியில் மாற்றமில்லை

கொழும்பு மாநகரசபை மேயர் பதவியில் மாற்றமில்லை

0

 கொழும்பு மாநகரசபையின் மேயர் பதவியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படாது என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மாநகரசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டாலும், நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மேயர் விராய் கெலி பல்தாசாரினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும் எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

சட்டத்தின் பிரகாரம் அடுத்த ஆண்டில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் மாநகரசபையை கலைப்பதற்கு முடியாது என அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏதேனும் ஓர் காரணத்திற்காக இரண்டாவது தடவையாகவும் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் கூறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றில் புதிய மேயர் ஓருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவ்வாறான ஓா் நிலைமை உருவாக வேண்டுமானால் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 20 குழுக்கள் ஒன்றிணைய வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version