Home இலங்கை சமூகம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

0

இந்த மாதத்திற்கான லாஃப்ஸ் (laugfs gas) சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே. பீரிஸ் (Niroshan J Pieries) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கோதுமை மா உள்ளிட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உச்ச கட்டுப்பாட்டு விலைகளை நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority) வெளியிட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலை

இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 162 முதல் 184 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 முதல் 264 ரூபா வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் பருப்பு 270 முதல் 303 ரூபா வரையிலும் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராம் 180 முதல் 232 ரூபாய் வரையிலும்,

மேலும் 400 கிராம் பால்மாவின் விலை 910 முதல் 1050 ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version