Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி தொடர்பில் குற்றச்சாட்டை முன்வைத்த கவிந்த ஜயவர்தன

நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி தொடர்பில் குற்றச்சாட்டை முன்வைத்த கவிந்த ஜயவர்தன

0

அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர, நீதித்துறையால்
வழங்கப்பட்ட உத்தரவு ஒன்றை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கக்கோரியது ஒரு
தீவிரமான விடயம் என்றும், அது நீதித்துறையைத் செல்வாக்கு செலுத்துவதற்குச்
சமம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று கருத்துக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

“நீதித்துறையால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நடைமுறைபடுத்த வேண்டாம் என்று ஒரு
நாடாளுமன்ற உறுப்பினர் கேட்பது ஒரு தீவிரமான விடயம்.

அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படலாம்.

நான் ஒரு சட்டத்தரணி அல்ல, ஆனால் அது நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படலாம்
என்று நான் உணர்கிறேன்,” என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version