Home இலங்கை சமூகம் நில அளவைத் திணைக்களத்தின் மக்களுக்கான நற்செய்தி

நில அளவைத் திணைக்களத்தின் மக்களுக்கான நற்செய்தி

0

டிஜிட்டல் அரச சேவைகளை நோக்கிய ஒரு முக்கிய படியாக, காணி வரைபடங்கள் நாளை (ஓகஸ்ட் 1) முதல் நிகழ்நிலையில் கிடைக்கும் என்று நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் 225வது ஆண்டு விழாவை முன்னிட்டு கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது காணி அளவை ஆணையாளர் நாயகம் வை.ஜி. ஞானதிலக்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

நேரடியாக வரைபடங்கள்

“இதுவரை பொதுமக்கள் நில அளவையாளர் அலுவலகங்களுக்குச் சென்று மட்டுமே வரைபடங்களை பெற்றுக்கொண்டனர்.

இப்போது, திணைக்களத்தின் இணையதளத்தின் மூலமாக நிகழ்நிலையில் பணம் செலுத்தி, வரைபடங்களை நேரடியாகப் பெறலாம்,” என அவர் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, நில உரிமை தொடர்பான தகவல்களை வழங்கும் நிலப் பதிவுத் திணைக்களத்துடன், இந்த புதிய தரவுத்தொகுப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் வரைபடங்கள்

இதன் மூலம், நில உரிமை மற்றும் அளவைத் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அதிக விரைவாகவும் எளிதாகவும் பெற முடியும் என கூறப்படுகிறது.

திணைக்களத்தின் தரவுத்தொகுப்பில் 24 இலட்சத்துக்கும் மேற்பட்ட காணிகள் தற்போது மின்னணு வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும், நில உரிமை சான்றிதழ்கள் வெளியீட்டில் உள்ளடக்கப்படும் வரைபடங்களும் இனி டிஜிட்டல் வடிவிலேயே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

NO COMMENTS

Exit mobile version