Home இலங்கை சமூகம் மண்ணுக்குள் புதையுண்ட உடல்களில் இருந்து துர்மணம் – அச்சத்தில் மக்கள்

மண்ணுக்குள் புதையுண்ட உடல்களில் இருந்து துர்மணம் – அச்சத்தில் மக்கள்

0

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை, இறம்பொடை, கெரண்டியெல்ல உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிதீவிர வானிலையால் குறித்த பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு பலர் மண்ணுக்குள் புதையுண்டனர். அதிலிருந்து பலரின் உடலங்கள் மீட்கப்பட்டன.

எனினும், மீட்கப்படாத உடலங்களில் இருந்தே இந்த துர்மணம் வெளியாகலாம் என பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் தொற்று நோய்கள் குறித்தும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

தொற்று நோய்களும் ஏற்படாது

இந்த நிலையில் பொதுமக்களின் இந்த சந்தேகம் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்கவ விளக்கமளித்துள்ளார்.

அவர் கருத்து தெரிவிக்கையில்,  பேரிடர் என்பதால் மண்ணுக்குள் அனேகமான உடலங்கள் புதையுண்டிருக்கலாம்

எனினும், புதையுண்டிருக்கலாம் என நம்பப்படும் உடலங்களில் இருந்து துர்மணம் வீசுவதால்

எவ்வித தொற்று நோய்களும் ஏற்படாது எனக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் மற்றும் அனர்த்தங்கள் பதிவாகியுள்ள பிரதேசங்களில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version