Home இலங்கை சமூகம் புஸ்ஸல்லாவ நகரில் மண்சரிவு அபாயம்! வெளியேற்றப்பட்ட மக்கள்

புஸ்ஸல்லாவ நகரில் மண்சரிவு அபாயம்! வெளியேற்றப்பட்ட மக்கள்

0

கம்பளை-நுவரெலியா பிரதான வீதியிலுள்ள புஸ்ஸல்லாவ நகரில் மண்சரிவு அபாயம் காரணமாக 7 ஏழு கடைகள் மூடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

திடீர் வெடிப்பு மற்றும் சேதம் காரணமாக கடைகள் மூடப்பட்டதாக புஸ்ஸல்லாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பேரிடர் நிலைமை குறித்து ஒலிபெருக்கிகள் மூலம் கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தெரிவிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மோசமான வானிலை

மோசமான வானிலை காரணமாக, புஸ்ஸல்லாவ நகரத்திற்கு அருகிலுள்ள செங்குவாரி தோட்டத்தின் மேல் பகுதியில் விரிசல் காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புஸ்ஸல்லாவ பல்லேகம பிரிவில், வெடிப்புகளால் சேதமடைந்த பல இடங்களை சீரமைக்கும் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

இதில் உள்ளூர்வாசிகள், கிராம அலுவலர், மத தலைவர்கள் உட்பட பலர் இணைந்து கொண்டனர்.

NO COMMENTS

Exit mobile version