Home இலங்கை சமூகம் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0

இலங்கையில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பதுளை (Badulla) மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல, வெலிமடை மற்றும் பதுளை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்,

கண்டி மாவட்டத்தில் உடுதும்பறை, மெததும்பறை, பஹததும்பறை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை

அத்தோடு, நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் வலப்பனை, ஹங்குரன்கெத்தை பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்,

மாத்தளை (Matale) மாவட்டத்தின் ரத்தோட்டை, உக்குவளை பிரதேசங்களுக்கும்

குருநாகல் மாவட்டத்தின் ரிதீகம பிரதேச செயலாளர் பிரிவுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version