Home இலங்கை சமூகம் புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் கொட்டும் மழையில் சத்தியாக்கிரக போராட்டத்தில்

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் கொட்டும் மழையில் சத்தியாக்கிரக போராட்டத்தில்

0

திருகோணமலை – புல்மோட்டை கனிய மணல் கூட்டுத் தாபனத்தில் பணியாற்றி வரும் 83
ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்கப்படவில்லை என தெரிவித்து கொட்டும்
மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக இன்றையதினம் (18) 37ஆவது நாளாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 15 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால் பொருளாதார ரீதியாக தங்களது
குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை பிள்ளைகளின் கல்வி
நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

போராட்டம்

இது தொடர்பில் உரிய துறை சார் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித
தீர்வும் கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த தேர்தலின் போது தங்களுக்கு அனுர அரசாங்கம் தீர்வுகளை பெற்று தரும் என்ற
நம்பிக்கையில் வாக்களித்த போதிலும் தங்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாதது போல்
இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

தங்களுக்கு சாதகமான தீர்வை பெற்றுத் தரக் கோரி சத்தியாக் கிரக போராட்டத்தை
முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version