Home இலங்கை குற்றம் போலி மலேசிய கடவுச்சீட்டு பயன்படுத்திய இலங்கையர் கைது

போலி மலேசிய கடவுச்சீட்டு பயன்படுத்திய இலங்கையர் கைது

0

போலி மலேசிய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒஸ்ட்ரியாவிற்கு பயணம் செய்ய முயற்சித்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு போலி மலேசிய கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக ஒன்பது மில்லியன் ரூபாவினை குறித்த நபர் செலுத்துவதாக இணங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த நபரின் செயற்பாடுகளில் சந்தேகம் எழுந்த அதிகாரிகள் விசாரணை நடத்திய போது அவர் பயன்படுத்தியது போலிக் கடவுச்சீட்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் சமர்ப்பித்த கடவுச்சீட்டின் புகைப்படமும் குறித்த நபரின் தோற்றமும் மாறுபட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நபரிடமிருந்து இலங்கை கடவுச்சீட்டு ஒன்றையும் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

எயார் இந்தியா விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ.282 விமானத்தின் ஊடாக குறித்த நபர் ஒஸ்ட்ரியாவின் வியன்னா நோக்கிப் பயணிக்க முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் போலிக் கடவுச்சீட்டுக்காக ஒன்பது மில்லியன் ரூபா செலுத்த இணங்கப்பட்டதாகவும், முதலில் 3 மில்லியன் ரூபா செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பயணத்தின் நிறைவில் நிலுவைத் தொகையை செலுத்துவதாக இணங்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version