Home இலங்கை குற்றம் மகிந்தவின் கோட்டைக்குள் தொடர்ந்து சிக்கும் மர்மங்கள் – தேடுதல் வேட்டையில் பொலிஸார்

மகிந்தவின் கோட்டைக்குள் தொடர்ந்து சிக்கும் மர்மங்கள் – தேடுதல் வேட்டையில் பொலிஸார்

0

முன்னான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோட்டையான ஹம்பாந்தோட்டை மற்றும் அதனை அண்டிய கடற்பகுதிகளில் தொடர்ந்தும் பாரியளவிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றையதினம் தெற்கு கடற்கரையில் கடலில் மிதந்து வந்த 51 பொதிகளில் பெருந்தொகை போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அதில் மொத்தம் 839 கிலோகிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சோதனை நடவடிக்கை

பொதிகளில் 670 கிலோகிராம் ஐஸ் மற்றும் 156 கிலோகிராம் ஹெராயின் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பொதிகளில் கிட்டத்தட்ட 12 கிலோகிராம் ஹாஷிஷ் இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வாறு மீட்கப்பட்ட போதை பொருட்கள், போதைப்பொருள் கடத்தல்காரரான உனகுருவே சாந்த என்பவருடையது என சந்தேகிக்கப்படுகிறது.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் 3 கப்பல்கள் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டு வர முயற்சிப்பதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் இயக்குநர் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்தது.

பொலிஸ் கண்காணிப்பாளர்

அதற்கமைய, பொலிஸ் கண்கானிப்பாளரின் நேரடி மேற்பார்வையின் கீழ், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம், தேவுந்தர மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்களாக சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, கப்பல்களின் பணியாளர்களை தொடர்பு கொண்ட போதிலும் அவர்கள் அது குறித்து எந்த குறிப்பிட்ட தகவலையும் வழங்கவில்லை.

கப்பல்களின் இருப்பிடத்தை அடையாளம் காண கப்பல்களில் நிறுவப்பட்ட VMS அமைப்பையும் அவர்கள் முடக்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் இலங்கை விமானப்படை உதவி செய்த போதிலும், 3 கப்பல்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

நாட்டில் தீவிரம் அடைந்துள்ள போதைப்பொருள் வர்த்தகத்திற்கு முன்னாள் அரசாங்கமே காரணம் என சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version