இலங்கையில் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட பெருமளவு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்களை குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தலங்கம, மாதிவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சூதாட்ட இணையதளம்
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தியாவில் தடை செய்யப்பட்ட சூதாட்ட இணையதளம் ஒன்றுக்காக பணியாற்றியமை தெரிய வந்துள்ளது.
கடந்த 24ஆம் திகதி முதல் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது சீனா, பிலிப்பைன்ஸ், மாலைதீவு, பாகிஸ்தான், இந்தியா மற்றும் நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நிதி மோசடி
சமூக ஊடகங்கள் ஊடாக, இவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
5000 ரூபாய் முதலீடு செய்தால் 3000 ரூபாய் இலாபம் கிடைக்கும் என்று கூறி அதிகளவில் பணம் வசூலித்து இவர்கள் மோசடியில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.