Home ஏனையவை வாழ்க்கைமுறை இலங்கையில் மூளைக்காய்ச்சல் பரவல் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

இலங்கையில் மூளைக்காய்ச்சல் பரவல் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

0

நாட்டில் மூளைக்காய்ச்சல் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நோய்ப்பரவல் ஆய்வுப் பிரிவின் மருத்துவ நிபுணர் ஹரேந்திர தசநாயக்க தெரிவித்துள்ளார்.

மூளைக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகள் சுமார் 280 பேர் இதுவரை பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நோயாளிகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மூளைக்காய்ச்சல் நோய் முதன்முதலில் பதிவான தெனியாய பகுதியில் இருந்து தற்போது புதிய நோயாளிகள் யாரும் பதிவாகவில்லை.

நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட ரிக்கில்லகஸ்கடா மற்றும் கண்டி பகுதிகளில் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நோய்ப்பரவல் ஆய்வு பிரிவு குழுக்கள் நோய்க் கட்டுப்பாட்டு திட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார். 

YOU MAY LIKE THIS VIDEO


Source: https://tamilwin.com/article/largely-controlled-outbreak-of-meningitis-1781409160

NO COMMENTS

Exit mobile version