Home இலங்கை குற்றம் தீவிரமடையும் லசந்த கொலை விவகாரம்.. புலனாய்வாளர்களின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

தீவிரமடையும் லசந்த கொலை விவகாரம்.. புலனாய்வாளர்களின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

0

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் காலியில் வைத்து குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை, முன்னதாக இன்று லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

 பல கைதுகள்

காலியில் வெலிகம பொலிஸாரால் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்றும், அவர் காலியில் உள்ள ஹியாரே பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். 

மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு முந்தைய நாள் அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுடன் காலி மற்றும் மாத்தறை பகுதிகளுக்குச் சென்றதாகவும் கூறப்பட்டது. 

அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் சந்தேக நபரிடமிருந்து ரூபா 20,000 பெற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version