Home இலங்கை குற்றம் மிதிகம லசா படுகொலையின் துப்பாக்கிதாரி குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள்

மிதிகம லசா படுகொலையின் துப்பாக்கிதாரி குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள்

0

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி முன் முன்னிலைபடுத்தப்பட்டார்.

நேற்று (26) பிற்பகல் நாவின்னவில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று (27) பிற்பகல் கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி முன் முன்னிலைபடுத்தப்பட்டார்.

தடுப்புக் காவல்.. 

மேலும், கைது செய்யப்பட்ட பின்னர், சந்தேக நபர் பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலிருந்து சந்தேக நபர், வெளியே அழைத்து வரப்பட்டார். 

கொழும்பு தடயவியல் மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைபடுத்தப்பட்டு, அதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version