Home இலங்கை சமூகம் கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் மனைவிக்கு ஐ.நாவில் கிடைத்த முக்கிய பதவி!

கொல்லப்பட்ட ஊடகவியலாளரின் மனைவிக்கு ஐ.நாவில் கிடைத்த முக்கிய பதவி!

0

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி ஊடகவியலாளர் சோனாலி சமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் மினிஸ்டர் கவுன்சிலராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி ஊடகவியலாளர் ரெயின் விக்ரமதுங்க மற்றும் லசந்த விக்ரமதுங்கவின் மூன்று குழந்தைகளும் இந்த கொலை தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை கோரி அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை, கல்கஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படும் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலான விசாரணைகளின் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்ட மூவரை விடுவிப்பதற்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சட்ட மா அதிபர் எடுத்த நடவடிக்கை குறித்து லசந்த விக்ரமதுங்கவின் மகள கவளை வௌியிட்டிருந்தார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க தொடர்பிலான மேலும் பல சுவாரஸ்ய தகவல்களுடன் வருகின்றது ஐபிசி ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,  

https://www.youtube.com/embed/c8lvg62BEcI

NO COMMENTS

Exit mobile version