Home இலங்கை குற்றம் லசந்த விக்ரமசேகரவின் கொலை: பெண்ணொருவர் உட்பட மூவர் அதிரடியாக கைது

லசந்த விக்ரமசேகரவின் கொலை: பெண்ணொருவர் உட்பட மூவர் அதிரடியாக கைது

0

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப்புலனாய்வுப்பிரிவு (சிஐடி) இன்று (26) மூன்று பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெகிராவ பகுதியில் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

சிறப்பு தேடுதல் நடவடிக்கை

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதுடன், நேற்று தென் மாகாணம் முழுவதும் பொலிஸார் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில், படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் இறுதிச் சடங்குகள் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள நிலையில், உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version