துள்ளுவதோ இளமை பட புகழ் நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு சினிமா துறையினர் உதவியுடன் இறுதி சடங்குகளை நடைபெற்றது.
கடந்த சில வருடங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சினிமா துறையினர் சிலரும் பண உதவி செய்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணம் அடைந்தார்.
விஜய் சேதுபதி போட்டோவை செருப்பால் அடித்து போராட்டம்.. பிக் பாஸ் ஷோவை தடை செய்ய கோரிக்கை
துப்பாக்கி படத்தில்..
அபிநய் விஜய்யின் துப்பாக்கி படத்திலும் பணியாற்றி இருக்கிறார். வில்லன் வித்யுத் ஜம்வாலுக்கு அவர் தான் டப்பிங் பேசி இருப்பார்.
வித்யுத் ஜம்வாலுக்கு துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட படங்களில் டப்பிங் பேசியது அபிநய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
