Home இலங்கை சமூகம் E-8 விசா முறைமையில் சிக்கல்: இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

E-8 விசா முறைமையில் சிக்கல்: இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

0

சில தரப்பினரின் தலையீடு மற்றும் E-8 விசாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முறைக்கு அப்பாற்பட்டு பணிபுரிவதால், தென்கொரியாவில் வேலைவாய்ப்பிற்காக வேலைகளுக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, குறித்த விடயம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தின் (Vijitha Herath) கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (20) பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு விஜயம் செய்த அமைச்சர், பணியகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான பணியாளர்கள் குழுவுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

தேவையான நடவடிக்கை

அதன்போது, தென் கொரியாவில் E-8 விசா முறையின் கீழ் பணியாளர்களை பரிந்துரைப்பது குறித்து மேலும் ஆய்வு செய்யவும், அது தொடர்பான சட்ட நிலைமையை கண்டறிந்து எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

இந்த விசேட கலந்துரையாடலில் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க, பொது முகாமையாளர் டி.டி.பி. சேனநாயக்க மற்றும் உயர் அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version